பொறிப்பதற்கு ஏற்ப விற்கப்படும் சீலா மீன்

கீழக்கரை: கீழக்கரை மீன் மார்க்கெட் மற்றும் கிழக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீலா மீன் 10 கிலோ முதல் 15 கிலோ வரை விற்பனைக்கு வருகிறது. அவற்றை எளியமுறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கத்தியில் முறையாக பல துண்டு களாக வெட்டப்பட்டு எடை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடலில் பிரஷ்ஷாக பிடி படக்கூடிய சீலா மீன்களை நகர் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் பல துண்டு களாக வெட்டி கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய் கின்றனர். பொறிப்பதற்கும், குழம்பு வைப்பதற்கும் ஏற்ற முதல் தரமான சீலா மீனை அசைவ பிரி யர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement