இன்று முதல் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் 14 வயது நிரம்பிய 13 ஆயிரத்து 200 பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று (பிப்.,28) முதல் இலவசமாக செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்று நோய்களில் மார்பக புற்று நோய்க்கு அடுத்தபடியாக, கருப்பை வாய் புற்று நோய் கண்டறியப்படுகிறது. ஹெச்.பி.வி., வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்று நோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 99.7 சதவீதம் வரை தடுக்க இயலும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 வயது நிரம்பிய 13 ஆயிரத்து 200 குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று (பிப்.,28) முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும். இம்முகா மிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, அலைபேசியை கட்டாயமாக கொண்டுவர வேண்டும். https://uwin.mohfw.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
-
பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகள்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
-
19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்
-
பாலியல் குற்றவாளியுடன் என்ன தொடர்பு: முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் 6 மணி நேரம் விசாரணை
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
நள்ளிரவில் வரும் யானை பகலில் வந்ததால் அச்சம்