முஸ்லிம்களுக்கு ராஜ்யசபா சீட் இதயத்துல்லா விருப்பம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்., கட்சி யின் மாநில துணைத் தலைவர் இதயத்துல்லா கூறியதாவது:

எனக்கு காமராஜர் விருது வழங்கிய ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தி.மு.க., - காங்., கூட்டணி அகில இந்திய தலைமையின் அறிவிப்பின்படி வலிமையாக இருக்கிறது.

இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். காங்., கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா இடம் வழங்குவதாக அறிகிறோம். ஆகவே தகுதியான மூத்த தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டும்.

இருந்தாலும் ஒரு கூடுதல் கோரிக்கையாக கடந்த இரு முறை 2019, 2024ல் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. ஆகவே முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் தருவதாக அகில இந்திய தலைமை கூறியுள்ளது. அதன்படி யாராவது ஒரு சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவருக்கு ராஜ்ய சபா இடம் வழங்கி னால் நன்றாக இருக்கும் என்றார். உடன் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுல்ஆலம் இருந்தார்.

Advertisement