நேபாளத்தில் பொதுத்தேர்தல்; மார்ச் 2 முதல் 3 நாட்களுக்கு இந்திய எல்லை மூடல்

புதுடில்லி: மார்ச் 2ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இந்தியா-நேபாள எல்லைகள் மூடப்படுகின்றன.

நேபாள நாட்டில் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. சுதந்திரமான, நியாயமான மற்றும் எந்த வித அச்சமும் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவை ஒட்டியுள்ள பாங்கே மாவட்டத்தின் முழு பகுதியிலும் உள்ள அனைத்து எல்லை புறக்காவல் நிலையங்கள் மார்ச் 2ம் தேதி நள்ளிரவில் இருந்து மார்ச் 5ம் தேதி நள்ளிரவு வரை மூடப்படுகிறது.

எல்லைகள் மூடப்படும் தருணத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அத்தியாவசியமான மருந்துகள் வினியோகம் நிறுத்தப்படாது.

நேபாள நாட்டின் பொதுத்தேர்தல் காரணமாக, எல்லைகள் மூடப்படுவதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதத்தை அனுப்பி உள்ளது. எல்லைகள் மூடப்படும் அதே நேரத்தில் இருதரப்பிலும் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

Advertisement