காங்கிரசுக்கு ஓட்டுப்போட மக்களுக்கு விருப்பமில்லை: பிரதமர் மோடி
புதுடில்லி: காங்கிரசுக்கு ஓட்டுப்போட சாமானிய மக்களுக்கு விருப்பமில்லை. இளைஞர்களின் ஓட்டு அதிகரித்து வருவதால், காங்கிரசின் ஓட்டு சதவீதம் சரிந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த ஆங்கில டிவி சேனலின் விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் பலத்தை இந்த மாநாடு உணர்த்துகிறது.கடந்த11 ஆண்டுகளில் நமது பலத்தை நாம் உணர்ந்து வருகிறோம்.நமது உள்கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். மேட் இன் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான இன்ஜீனாக உள்ளது. இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம். நமது தன்னம்பிக்கை காரணமாக பல நாடுகள் நம்முடன் ஒப்பந்தம் போட ஆவலாக உள்ளன. நமது வர்த்தக ஒப்பந்தத்தால் பலர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகத்திற்கான வளர்ச்சி இன்ஜினாக இந்தியாவை மாறியுள்ளது. நமது டிஜிட்டல் கட்டமைப்புகளை பார்த்து உலகம் வியப்பில் உளளது. உலகின் மிகப்பெரிய 3வது மெட்ரோ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது.நமது பலத்தை உணர்ந்து கொண்டதால் தான் இது சாத்தியம் ஆகி உள்ளது.வந்தேபாரத், நமோ பாரத் போன்ற ரயில் சேவைகளும் சாத்தியம் ஆகி உள்ளன.
டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் காங்கிரசின் போராட்டம், அக்கட்சியின் கொள்கை காலாவதி ஆகிவிட்டதை உணர்த்துகின்றன. இந்த மிகப்பெரிய தவறு காரணமாக காங்கிரஸ் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.போராட்டத்தை நியாயப்படுத்தமஹாத்மா காந்தி பெயரை அக்கட்சி பயன்படுத்துகிறது.சட்டையில்லாமல் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரசின் ஆணவம் மட்டுமே காரணம்.நாட்டின் எந்த வளர்ச்சியையும் எதிர்ப்பதாகவே காங்கிரசின் எண்ணம் உள்ளது.காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், ஆப்பரேஷன் சிந்தூர் , சர்ஜிக்கல் தாக்குதல், ஆகியவற்றையும் எதிர்த்தது.
சாமானிய மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட விரும்பவில்லை. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது காங்கிரசின் ஓட்டு சதவீதம் சரிவை சந்திக்கிறது. 4 மாநிலங்களில் மட்டுமே தற்போது காங்கிரஸ் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
we vote for congress only but the results says BJP won
brainless karan, I also vote for bjp but goes to congress how?
roads are bad due to corruption if anyone of ur family got hurt. vivek please laugh
விஷ்வகுரு இஸ்ரேல் டூர் டிரிப் சென்றிருந்த போது மக்கள் வந்து இவரிடம் மட்டும் சொன்ன செய்தி இது நாளை மதுரையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பாரத் மாதா கீ ஜே என காவி கொடியை தூக்கிக்கொண்டு ஒரு கோஷ்டி கும்பல் கூவிக்கொண்டு மதுரையை அயோத்தி ஆக்க முயற்சிக்கும் காவடி தூக்கும் ஒரு கைக்கூலி கட்சி இதை வேடிக்கை பார்த்துக்கொண்டே நீதிமன்ற தீர்ப்பை மீறுவதில் என்ன தவறு என கேள்வி கேட்கும் அதை நாளை மறுநாள் திருட்டு முன்னேற்றக் கழகம் வசை பாடுவானுகள் இதுதான் நடக்கும்
உண்மை. இப்போது தான் பாரதம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது
எப்படி வெக்கமே இல்லாம இப்டி பேசுறார் ....டெல்லி ஏஐ மாநாடு ஒரு மட்டமான மாநாடு ....அதை இவங்க அமைச்சரே ஒத்துக்கிட்டாரு ....அடுத்த தேர்தல் ல இருக்கு ஜி கு ...
அது திருட்டு காங்கிரஸ் செய்த டுபாக்கூர் வேளை என்று உனக்கும் தெரியும்
ஆமாம் கல்கோடிய யூனிவர்சிட்டி யார் ஆதரவு குடுக்குற னு ஊருக்கே தெரியும் ...
மக்களுக்கு விருப்பம் இருந்தாலும், உங்க மெஷின் விடாது