திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு

13

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளும் துவங்கி உள்ளது. அந்த அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிகளை இறுதி செய்யும் பேச்சு வார்த்தைகள் தொடங்கி உள்ளன.

சென்னையில் திமுக, இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் இடையே தொகுதிகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப்.28) கையெழுத்தானது.

கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

இந்திய முஸ்லிம் லீக் கட்சியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான ஒப்பந்தமும் இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்டது.

Advertisement