மத்திய கிழக்கில் போர்: இந்தியா கவலை
புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் நிலைமை கவலை அளிக்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்
ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பதட்டங்களைத் தணிக்கவும், பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.
இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தூதரகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஈரானில் சிக்கியுள்ள என் தமிழ் ரத்தத்தின் ரத்தங்களை உடனே மீட்கவேண்டும் என்று தமிழக முதல்வர், இந்திய பிரதமருக்கு இப்பொழுது கடிதம் எழுதுவார் பாருங்கள். ஆடிப்போயிடுவீங்க நீங்க தமிழக முதல்வரின் பாசத்தில் - வேஷத்தில்
போர் எதற்கு? போரினால் அழிவுதான் மிஞ்சும். மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமென்றால், ஈரான் தலைவர்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தி, தங்கள் நாட்டு மக்களை மற்றும் இரானில் வசிக்கும் மற்ற வெளிநாட்டினரையும் காக்கவேண்டும்.
பலபோர்களை தடுத்ததாக கூறும் அமெரிக்க அதிபர் இந்த போரையும் தடுத்து நிறுத்துவாரா? அட நீங்க வேற, அவர் எப்ப ஈரான் மீது குண்டுபோடலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்.