இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ அமைச்சர் பலி
டெஹ்ரான்:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்போர் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்தக் காலத்திலும் அணு ஆயுதம் தயார் செய்ய மாட்டோம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியது. பல முறை பேச்சு நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை முதல் இஸ்ரேல், அமெரிக்க படைகள், ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. வழக்கமாக இரவு நேரத்தில் மட்டுமே தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்க படைகள், இந்த முறை பகல் நேரத்தில் தாக்குதல் நடத்தியது பலருக்கும் ஆச்சர்யம்.
டெஹ்ரானில் அதிபரும், மதகுருவான ஆட்சியாளர் கமேனியும் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்துள்ளது. இதில் முக்கிய ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கூட்டம் நடப்பதை முன் கூட்டியே அறிந்து, இஸ்ரேலிய படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில், ஈரான் ராணுவ அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை கமாண்டர் முகமது பாக்போர் ஆகியோர் கொல்லப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனியின் நிலை என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அந்த நாலு பேரு வந்து அழுவானுங்களே , பேட்டி குடுப்பானுங்களே மனித நேயம் அது இதுன்னு .
தமிழக அரசு பேருந்து அனுப்புவதற்குள் இஸ்ரேல் அடித்து விட்டது ...
மதகுரு கமேனியின் முடிவும் அப்படித்தான் இருக்கும். பேசாம அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டுவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் இந்த கமேனி தன்னையும், தன்னுடைய நாட்டு மக்களையும் காப்பாற்ற முயல்வது சிறந்தது.
எப்படி தான் தீவிரவாதிகளை குறி வைத்து அடிக்கிறார்களோ.... அதற்க்காக இஸ்ரேல் நாட்டை உலக மக்கள் பாராட்ட வேண்டும்.
The Israeli area is 0.05% of india, their power is 20 times in India, We send 20 MPs to the other countries to explain about our oprasam sindoor...
ரமலான் மாதத்தில் காவிகள் உதிர்க்கும் வார்த்தைக்கு உரிய விலையை பெறுவீர்கள் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன் ஆமீன் ஆமீன்....
திரு.ரஹீம் சாந்தியும் சமாதானம் அமைதியும் பெறட்டும்.
முதல்வர் உடனடியாக பேருந்துகளை அனுப்பி அங்குள்ள உங்களபிமான தெலுங்கர்(முடிந்தால் தமிழர்களையும்) களை மீட்டு வரவேண்டும்.