மல்யுத்தம்: சவிதா 'வெண்கலம்'
திரானா: மல்யுத்தம் 'ரேங்கிங்' தொடரில் இந்திய வீராங்கனை சவிதா வெண்கலப் பதக்கம் வென்றார்.
அல்பேனியாவின் திரானா நகரில் சர்வதேச மல்யுத்த 'ரேங்கிங்' தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 62 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் சவிதா, மான்சி பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் மான்சி தோல்வியடைந்தார்.
சிறப்பாக செயல்பட்ட 20 வயது பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் ஆன சவிதா, காலிறுதியில் தோல்வியடைந்தார். அடுத்து 'ரெப்பிசாஜ்' வாய்ப்பு கிடைத்தது.
இதில் சவிதா, அமெரிக்காவின் அடாகுவோ டயானாவை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
68 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் கீர்த்தி, 4-8 என சுவீடனின் டின்ராவிடம் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement