ஈரான் மீதான தாக்குதல்; வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

2

டெல் அவிவ்: ஈரான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது.


@1brஅமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் 30 இடங்களில் குண்டு வீசப்பட்டது.

இதில் அணு சக்தி கூடங்கள், ஏவுகணை கூடங்கள், தலைவர்கள் வீடுகள், ராணுவ முகாம்கள் பெரும் சேதம் அடைந்தன. இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீடியோ வெளியிட்டுள்ளது.


இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் அணு ஏவுகணைத் திட்டத்தை எதிர்க்கின்றன.


ஆபரேஷன் ரோரிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு ஈரானில் நூற்றுக்கணக்கான இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://x.com/i/status/2027735956678222317

Advertisement