ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு

8


வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.


ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.


இதனால் பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


ஈரானில் பொதுமக்கள் உட்பட நுாற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.


அதேபோல், ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலத்த காயமுற்று பலியான இருவர் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

Advertisement