அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

18


வாஷிங்டன்: 'அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி செய்யப்பட்டது. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலைப் பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தினார். தற்போது தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அதிபர் டிரம்ப் விரும்புகிறார்.



இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடிகள் செய்யப்பட்டன. ஓட்டுகள் திருடப்பட்டன. நமது தேர்தலைப்பார்த்து உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. நாம் அவற்றை சரிசெய்யப் போகிறோம்.


இல்லையெனில் நமக்கு இனி ஒரு நாடு இருக்காது. குடியரசுக் கட்சியினர் அனைவரும் போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள் சட்டம் அவசியம். தேர்தலில் ஓட்டெடுப்பின் போது, அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.


ஓட்டளிக்க அனைத்து வாக்காளர்களும் குடியுரிமைச் சான்றைக் காட்ட வேண்டும். நோய்வாய்பட்டவர்கள், ராணுவத்தினரை தவிர மற்றவர்களுக்கு மெயிலில் இனி ஓட்டுக்கள் இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement