குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., சார்பில் நடந்த வேல் யாத்திரை நேற்று மாலை நிறைவு செய்யப்பட்டது.

மதுரை மண்டேலா நகரில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக பா.ஜ., சார்பில் மூன்றரை அடி உயரமுள்ள வெள்ளி வேல் நேற்று காலை திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

யாத்திரை முடிந்து மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு பூஜை நடந்தது. பின்பு வேல் கொண்டு செல்லப்பட்டது. பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், தொகுதி அமைப்பாளர் ராக்கப்பன், மண்டல் தலைவர் வேல்முருகன், நிர்வாகிகள் வெற்றிவேல் முருகன், இளையராஜா, கோபால், மணிகண்டன் உடன் சென்றனர். மார்ச் 1 அன்று பிரசார பொதுக்கூட்ட மேடையில் அந்த வேல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Advertisement