100 நாள் வேலையால் முடங்கும் விவசாய பணிகள்--
ராஜபாளையம்: 100 நாள் வேலை திட்டப் பணிகளால் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை, சாகுபடி செலவு அதிகரித்து வரும் நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவசாயத்திற்கு கை கொடுத்து வருவதாக சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நீர் வரத்தையடுத்து கண்மாய் பாசனத்தை நம்பி தேவதானம், சேத்துார், கணபதி சுந்தரநாச்சியார்புரம், சுந்தர்ராஜபுரம், முகவூர், கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். நெல் விவசாயத்தில் வரப்பு எடுத்தல், நாற்றுப்பாவுதல், நடவு, களை பறித்தல், மருந்து தெளிப்பு வரை ஆட்கள் அதிகம் தேவைப்படும்.
இந்நிலையில் பாரம்பரியமாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால் வழக்கமான பணிக்கு அதிக கூலி, தேவையான நேரத்திற்கு ஆட்கள் இல்லாதது போன்ற சிக்கல் ஏற்பட்டு தொலைதுார கிராமங்களில் இருந்து வாகனங்களை அமர்த்தி முன்பதிவு செய்து அட்வான்ஸ், கூலி அதிகம் கொடுத்து அழைத்து வருகின்றனர். வாய்ப்பு இல்லாதவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு ஆளாகினர்.
இந்நிலையில் சேத்துார், தேவதானம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மேற்கு வங்கம், பீஹார் பகுதிகளில் இருந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் இப்பணிகளில் கை கொடுத்து வருவதால் நடவு பணிகளும், செலவிலும் விவசாயிகளுக்கான சிக்கல் குறைந்துள்ளது.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள்: 100 நாள் வேலை விவசாயத்தை ஒன்றுமில்லாமல் செய்வது போதாது என 125 நாளாக அதிகரித்துள்ளனர். ஆட்கள் அதிகம் தேவைப்படும் நடவு பணிக்கு ஏக்கருக்கு 22 நபர்கள் நபருக்கு கூலி ரூ.250 என கடந்த ஆண்டு இருந்த நிலை தற்போது 300 உயர்த்தி ரூ.6600 ஆக்கிவிட்டனர். நாற்று சுமப்பது தனி செலவு. இந்நிலையில் ஏக்கருக்கு ரூ.5000 செலவில் அதிகாலை பணியை தொடங்கும் வட மாநில தொழிலாளர்கள் இரவு வரை இருந்து பணிகளை முடிப்பதால் விவசாயம் ஓரளவுக்கு கை கொடுக்கிறது. சிக்கல் அதிகரிக்கும் முன் அரசு மாற்று தீர்வு காண வேண்டும்.
மேலும்
-
சாம்சன் விளாசல்... அரையிறுதியில் இந்தியா: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
-
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
-
சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி; அரையிறுதிக்கு முன்னேற்றம்
-
போர் நடந்தாலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாது!
-
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
-
541 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்; தாக்கி அழித்ததாக சொல்கிறது யுஏஇ!