போர் நடந்தாலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாது!
நமது சிறப்பு நிருபர்
ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் வரத்தில் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், விலை உயர்வு மற்றும் பொருளாதார ரீதியான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வரத்து தடைபடும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான மாற்று திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு தெரிவித்தன.
ஹார்முஸ் ஜலசந்தி
* இந்தியாவின் 50 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
* கிட்டத்தட்ட 60 சதவீத இயற்கை எரிவாயு மற்றும் 100 சதவீத சமையல் எரிவாயு இறக்குமதியும் இந்த கடல் வழியை சார்ந்தே உள்ளன
* இந்த கடல் வழி நீண்ட காலத்துக்கு மூடப்பட்டால் மட்டுமே, மாற்று வழிகள் குறைவாக உள்ளதால், எரிவாயு வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
பொருளாதார தாக்கம்
* வினியோகத்தில் பெரும் தட்டுப்பாடு இல்லை என்றாலும், விலை உயர்வே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது
* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அது, இந்தியாவின் இறக்குமதி செலவை நேரடியாக அதிகரிக்கும்
* இதனால், நாட்டின் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், போரைக் காரணம் காட்டி நாம பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விடுவோம்தானே பாஸ்?
நம் முன்னோர் கரிஅடுப்பில் சமைத்ததை பிபிக்யு என்றும் விறகு அடுப்பில் சமைத்ததை wood fired பிசா என்றும் விளம்பரம் செய்து நம்மிடம் விற்கிறான். நாம் மீண்டும் நம் பாரம்பரியத்தை நாட வேண்டும்.
என்ன நடந்தாலும் அம்பானி தொழில் பாதிக்கப்பட மாட்டாது ஆசி அப்படி
துண்டுசீட்டு கோமாளியின் கொத்தடிமை கருத்து வேறு எப்படி இருக்கும்
டாஸ்மாக் இருப்பதால் சின்னப்பன் குடும்பம் பாதிக்கப்படாது
இது எப்படியோ பெட்ரோல் டீசல் விலை கூடாமல் இருந்தால் நல்லது தான்மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்