541 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்; தாக்கி அழித்ததாக சொல்கிறது யுஏஇ!
துபாய்: ஈரான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில்; ஈரான் நேற்று துவங்கிய தாக்குதலில் இருந்து இதுவரையில் 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 541 டிரோன்களை எங்களின் படைகள் எதிர்கொண்டுள்ளன. 541 டிரோன்களில் 506 இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன. இருப்பினும், 35 டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தின. இதில், 21 டிரோன்கள் பொதுமக்களை இலக்காக வைத்து தாக்கப்பட்டன.
ஈரானால் ஏவப்பட்ட 165 ஏவுகணைகளில் 152 ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. எஞ்சிய 13 ஏவுகணைகள் கடல் பகுதியில் விழுந்தன. ஏவப்பட்ட 2 குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. ஈரான் தாக்குதலில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியா, அமீரகம், எகிப்து, இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈரானின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தங்கள் படைகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள், வெளிநாட்டைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய்க்கு இது தேவையற்ற வேலை.மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்