தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.இதில் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக காலையில் ரிங் ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தனர். அங்கு அவர்களுடன் பியூஷ் கோயல் முன்னிலையில் இபிஎஸ் திடீர் ஆலோசனை நடத்தினார். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விரைவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவானது. இதற்கிடையே மார்ச் 4ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதிலும் தொகுதி பங்கீடு குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பழனிசாமி ஆலோசிக்க உள்ளார்.
கள்ள ஒட்டு போட வாய்ப்பில்லை என்றால் தீம்க்கா ஜெயிக்கவும் வாய்ப்பு குறைவு. விசை அண்ணா வேறு சிறுபான்மை ஓட்டை பிரித்து விடுவார்... ஆகவே தீம்க்கா ஜெயிக்க எடப்பாடி உதவி செய்யவில்லை என்றால் கண்டிப்பாக தீம்க்கா மீளமுடியாது.
தொகுதி பங்கீடு சுமுகமாக முடியவும் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாழ்த்துக்கள்மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்