ஈரான் நாட்டு போர் விமானங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
ஜெருசலேம்: ஈரானின் எப்-5 மற்றும் எப்-4 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இது குறித்து வீடியோவை பகிர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை: மேற்கு ஈரானில் உள்ள தப்ரிஸ் விமான நிலையத்தில் இரண்டு எப்5 மற்றும் எப்4 போர் விமானங்கள், ஜெட் விமானங்கள் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானிய விமானப்படையின் நடவடிக்கைகளை சீரழிக்கவும், அவர்களின் வான்வழி பாதுகாப்பின் சீரழிவை மேலும் விரிவுபடுத்தவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி ஏற்கனவே தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எப்போதும் எதிராக இருக்கும் இஸ்ரேல், டெஹ்ரானில் உள்ள கமேனியின் வளாகத்தில் நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களைக் காட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் ரோரிங் லயன் என்று பெயரிட்டுள்ளது.
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் பஹ்ரைன் போன்ற பல வளைகுடா நாடுகளும் பிராந்தியத்தில் அமைதியைக் கோரியுள்ளன, நிலைமையை மேலும் மோசமாக்குவதைத் தவிர்க்க ஈரானை வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தொடர்ந்து குறிவைப்பதாக ஈரான் கூறியுள்ளது.
போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்மேலும்
-
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
-
சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி; அரையிறுதிக்கு முன்னேற்றம்
-
போர் நடந்தாலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாது!
-
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
-
541 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்; தாக்கி அழித்ததாக சொல்கிறது யுஏஇ!
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி; துபாய் பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் மூடல்