அமெரிக்காவை கண்டித்து மார்ச் 3ல் கம்யூனிஸ்ட்டுகள், வி.சி., போராட்டம்
சென்னை: 'ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, வரும் மார்ச் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த தாக்குதல்கள், ஈரானின் தேசிய இறையாண்மை, ஐ.நா., சாசனம் மற்றும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும், அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. ஈரான் மீது ராணுவ தாக்குதலை, அமெரிக்கா துவக்கி உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிராகவும், மத்திய அரசு யுத்தவெறிக்கு எதிராக உரத்த குரல் கொடுக்க வலியுறுத்தியும், இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து, நாளை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூர் நகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று இதே சம்பவத்துக்காக பாகிஸ்தானில் உள்ள US embassy முன் பிரச்சனை ஏற்படுத்திய மத அடிப்படைவாதிகளை அமெரிக்கா காரன் சுட்டு கொன்றார்கள், அதுபோல இவர்களை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.
இரண்டும் முட்டாள்கள். அமெரிக்காவில் சென்று போராட வேண்டியது தானே. ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருக்குறதே அது இந்த கபோதிகளுக்கு தெரியவில்லையா ஏன் ரஷ்யா வை எதிர்த்து போராட இல்லை
We demand where these communists and Thiruma ji have gone while Hindus were killed by Islamic fanatics in Bangladesh about 3 weeks before ? Let them explain first . To whom , these guys want to please .மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்