விடுமுறை நாளான நேற்றும் தங்கம், வௌ்ளி விலை அதிகரிப்பு! சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்தது

சென்னை: விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு, 5,000 ரூபாயும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,800 ரூபாயும் உயர்ந்தது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆபரண சந்தைக்கு விடுமுறையாக இருந்த நிலையிலும், நேற்று நம் நாட்டில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 15,550 ரூபாய்க்கும், சவரன், 1,24,400 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 320 ரூபாய்க்கு விற்பனையானது.


நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் உயர்ந்து, 15,775 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,800 ரூபாய் அதிகரித்து, 1,26,200 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 3.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 7,000 ரூபாய், வெள்ளி விலை கிலோவுக்கு, 30,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

Advertisement