அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவியவர்கள்...
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர்.
எ.வ.வேலு
எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தில் இருந்த இவர், 1972ல் அ.தி.மு.க., வில் சேர்ந்தார். 1984ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1995ல் தி.மு.க., வில் இணைந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ., ஆன இவர் 2006-2011, 2021-2026 என இருமுறை அமைச்சர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர்.
ஜெகத்ரட்சகன்
அ.தி.மு.க. சார்பில் 1980ல் எம். எல்.ஏ., 1984ல் லோக்சபா எம்.பி., 1999ல் தி.மு.க., வில் இணைந்தார். மத்திய இணையமைச்சராக பதவி வகித்தவர்.
சாத்துார் ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆர்., ஆட்சியில் 1980-1988 பொதுப்பணி, கூட்டுறவு என இருமுறை அமைச்சர். 2001ல் தி.மு.க., வில் இணைந்தார். தி.மு.க.,வில் 2006-2011, 2021 - 2026 இருமுறை அமைச்சர். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலர்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க., சார்பில் 2001, 2006ல் எம்.எல்.ஏ., 2002 -2006ல் அமைச்சர். 2009ல் தி.மு.க., வில் சேர்ந்து 4 முறை எம்.எல்.ஏ., ஆனார். 2021-2026ல் அமைச்சராக இருக்கிறார். துாத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர்.
முத்துசாமி
எம்.ஜி.ஆர்., ஆட்சியில் 1977, 1980, 1984, என மூன்றுமுறை எம்.எல்.ஏ., 1980-1988 வரை அமைச்சர். பின் ஜெயலலிதா ஆட்சியில் 1991- 1996ல் அமைச்சர். 2010ல் தி.மு.க., வில் சேர்ந்தார். 2021-2026ல் அமைச்சர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலர்.
சேகர்பாபு
2001, 2006ல் அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., 2011ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். 2021ல் இருந்து அமைச்சராக உள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட செயலராக இருக்கிறார்.
ரகுபதி
1991ல் திருமயம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி. அமைச்சராகவும் பதவி வகித்தார். 1996ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். எம்.பி., மத்திய இணையமைச்சர், 2021ல் இருந்து சட்டத்துறை அமைச்சர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலர்.
ராஜகண்ணப்பன்
1972ல் அ.தி.மு.க.,வில் இணைந்தார். மாவட்ட செயலர். 1991-1996ல் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர். தனிக்கட்சி, தி.மு.க., கூட்டணி சார்பில் எம்.எல்.ஏ., ஆனார். 2009ல் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். 2019ல் தி.மு.க.வில் இணைந்தார். 2021ல் அமைச்சரானார்.
செந்தில் பாலாஜி
2006ல் அ.தி.மு.க.,வில் இணைந்தார். 2006ல் எம்.எல்.ஏ., 2011ல் அமைச்சர். மாவட்ட செயலராகவும் இருந்தார். 2018ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். 2021ல் அமைச்சர்.
தங்க தமிழ்செல்வன்
அ.தி.மு.க., சார்பில் 2001ல் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். 2011, 2016ல் எம்.எல்.ஏ., ஆனார். 2019ல் தி.மு.க.,வில் இணைந்தார். 2024ல் லோக்சபா எம்.பி., ஆனார்.
பழனியப்பன்
அ.தி.மு.க.,வில் 2011-2016ல் அமைச்சராக இருந்தார். 2012-2016 தலைமை நிலைய செயலர். 2021ல் தி.மு.க., வில் சேர்ந்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலர்.
தோப்பு வெங்கடாசலம்
அ.தி.மு.க.,வில் 2012-2013ல் அமைச்சராக இருந்தார். 2021ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர்.
செல்வகணபதி
1991 - 1996ல் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 2008ல் தி.மு.க., வில் இணைந்தார். 2010ல் ராஜ்யசபா எம்.பி., 2024ல் இருந்து லோக்சபா எம்.பி., யாக உள்ளார்.
லட்சுமணன்
அ.தி.மு.க.,வில் 2013 - 2019ல் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். 2020ல் தி.முக., வில் சேர்ந்தார். 2021ல் எம்.எல்.ஏ., ஆனார். விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர்.
ஆறுகுட்டி
அ.தி.மு.க., வில் 2011, 2016 என இருமுறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர். 2022ல் தி.மு.க., வில் இணைந்தார்.
வைத்திலிங்கம்
2001-2006, 2011-2016ல் அ.தி.மு.க., சார்பில் அமைச்சர். 2017-2022ல் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 2026ல் தி.மு.க., வில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன்
அ.தி.மு.க.., முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன். 1993ல் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். இருமுறை எம்.எல்.ஏ., ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். 2025ல் தி.மு.க., வில் இணைந்தார்.
அன்வர்ராஜா
அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., லோக்சபா எம்.பி.,யாக இருந்தார். 2001-2006ல் அமைச்சர் பதவி வகித்தார். 2025 ஆகஸ்டில் தி.மு.க.,வில் இணைந்தார். இலக்கிய அணி தலைவராக உள்ளார்.
மைத்ரேயன்
அ.தி.மு.க.,வில் 1999ல் இணைந்தார். 3 முறை ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். 2025ல் தி.மு.க., வில் சேர்ந்த இவர் கல்வியாளர் அணி துணைத் தலைவராக உள்ளார்.
நிலோபர் கபில்
அ.தி.மு.க., வில் 2006-2011ல் அமைச்சராக இருந்தார். 2026ல் தி.மு.க., வில் இணைந்தார்.
பன்னீர்செல்வம்
1973ல் அ.தி.மு.க.,வில் இணைந்தார். எம்.எம்.ஏ., மாவட்ட செயலர், அமைச்சராக பதவி வகித்துள்ளார். கட்சியின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் இருந்தார். எதிர்க்கட்சி துணை தலைவர், மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். 2026 பிப். 27ல் தி.மு.க.,வில் இணைந்தார்.
இதுதவிர அ.தி,மு,க,, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன் (உசிலம்பட்டி), வி.பி.கலைராஜன் (தி.நகர்), கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை), சின்னசாமி (சிங்காநல்லுார்), சுப்புரத்தினம் (பழநி), பால கங்காதரன் (சிவகாசி), அ.தி.மு.க., கட்சியின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் உள்ளிட்டோர் தி.மு.க., வில் இணைந்துள்ளனர்.
தி மு க வளர்ந்தது யாரால் ?
if admk rule for 10years again these people will come back, useless peoples
In a way, Both DMK and AIADMK are washing machines capable of removing corruption ges when one switchover from one party to another.Ultimatrly corruption thieves unabately while poor voters suffer continuously.
துறை முருகன் , பாலு இவர்களெல்லாம் திமுகவில் இருப்பவர்கள் .
ஸ்டாலின் இங்கேயும் ஸ்டிக்கர் ஒட்டித்தான் வேலைசெய்கிறார் .திமுக பேனரில் அதிமுக ஆட்சிதான் நடக்கிறது. திமுகவில் இருக்கும் யாருக்கும் இந்த தவறை சுட்டிக்காட்டி குரல் எழுப்ப முடியவில்லையே ? பேசாமல் திமுகவை கலைத்து அதிமுகவில் இருந்தே விடலாம் ஆனால் மக்களாகிய எங்களுக்கு எப்போது திராவிட இயக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்?
MGR also come from DMK
But the ADMK itself come from DMK right?
Idiot TN people vote again again and again to elect these thumaigal. They will serve for you 1000% without looting the public money
Idiot can only know about idiot
ஸ்டாலின் குடும்பம் தவிர எல்லாரும் அங்கே இருந்துதான் வந்திருபானுங்க போல
மறைந்த நாஞ்சில் மனோகரன் ,சுப்புலட்சுமி ஜெகதீசன் , இந்திர குமாரி உள்ளிட்ட பலர்மேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்