மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்; இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
கொழும்பு: அமெரிக்கா - ஈரான் இடையே 3வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க மறுத்தது. மேலும், 3வது நாளாக சண்டை நீடித்துள்ள நிலையில், மேற்காசிய நாடுகளில் ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
எண்ணெய் வளங்கள் உள்ள நாடுகளின் மீது நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதலால், எந்த நேரமும் உலக நாடுகளிடையே எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அபாயம் உண்டாகியது. குறிப்பாக, இந்தப் போரை தீவிரப்படுத்தும் விதமாக, எண்ணெய் ஆலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் நானுஓயா ஆகிய பகுதிகளில் பெட்ரோல், டீசல் இல்லாததால் பங்குகள் மூடப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான பெட்ரோல் பங்குகளே திறந்துள்ளதால், எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
-
பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு
-
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: டில்லியில் இருந்து 2 நாட்களில் 760 சர்வதேச விமான சேவைகள் ரத்து
-
ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு
-
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்