மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: டில்லியில் இருந்து 2 நாட்களில் 760 சர்வதேச விமான சேவைகள் ரத்து

2

புதுடில்லி: டில்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் பாதிப்பு காணப்படுகிறது. 2 நாட்களில் 760 விமான சேவைகளும், இன்று ஒருநாள் மட்டும் 87 சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. போர் நீடிப்பதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் இன்னமும் ஓயவில்லை.

இந் நிலையில், தலைநகர் டில்லியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் 3வது நாளாக பாதிப்பு நிலவுகிறது. டில்லி விமான நிலையத்தில் இருந்து இன்று மட்டும் கிட்டத்தட்ட 87 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

டில்லி விமான நிலையத்தில் இருந்து 37 புறப்பாடுகளும், 50 வருகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, 2 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 760 விமான சேவைகள் ரத்தாகி இருக்கின்றன.

Advertisement