ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கியது யார்: எங்களுக்கு தெரியாது என்கிறது சீனா
பெய்ஜிங்: அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் பயன்படுத்தும் ஏவுகணைகள், சீனாவிடம் இருந்து பெற்றதாக வெளியான தகவலுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. கத்தார், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிற பிராந்தியங்களுக்கு போர் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், சீனாவிடம் இருந்து ஏவுகணைகளை ஈரான் பெற்றதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; தற்போது நடந்து வரும் போர், மற்ற பிராந்தியங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையேயான மோதலில், பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்திற்குரியது. ராணுவ நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறோம். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனாவுக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.
ஈரான் சீனாவிலிருந்து ஏவுகணைகளைப் பெறுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த மோதலில், ஈரானில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து சீன மக்கள், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற வேண்டும். இதுவரை 3,000க்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் எண்ணெய்க்கு ஈடாக சீனாவிடம் வாங்கிய வான் பாதுகாப்பு சாதனங்கள்
மற்றும் போர்த்தளவாடங்கள்
இந்த போரில் சரிவர வேலை செய்யவில்லையாம். மேலும் சீனா கொடுத்த ஏவுகணைகளும் குறிப்பிட்ட இலக்கை அடையாமல் ஈரானுக்குள்ளேயே விழுந்து விட்டனவாம் அதனால் ஈரான் சீனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்ம டீ.ஆர்.பா. மாதிரி தான் இவங்க பதிலும்.அடேங்கப்பா பொய் சொல்றதுல ஒரு அளவு தர்ம நியாயமோ இல்ல.மேலும்
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
-
பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு
-
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: டில்லியில் இருந்து 2 நாட்களில் 760 சர்வதேச விமான சேவைகள் ரத்து
-
ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு
-
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்