டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
நமது டில்லி நிருபர்
டில்லிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என ஒரே வரியில் இபிஎஸ் பதிலளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்பட மேலும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, அ.தி.மு.க., குழு அமைக்காதது, கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இபிஎஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திடீரென டில்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவர் பேசுவார் என வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
டில்லி சென்ற இபிஎஸிடம் விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என பதில் அளித்தார். இதனால் தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பாவம் இவர் நேற்று மோடி வந்தார் அப்படி இருந்தும் இவரை டெல்லிக்கு ஓட விட்டு இருக்கிறார்களே
ஷா டெல்லியில் தான் இருக்கிறார் அதான்
வெற்றி தோல்வி சகஜம். கட்சி முக்கியம். வருவது வரட்டும் இர ண்டில் ஒணறு
பாத்து விடு. ஒரு x தீய மூக வுக்கு மறைமுகமா உள் ளது
துணிந்து நில்.
எடப்பாடி நம்பிக்கைக்கு உரியவர் அல்லர்.
இது MGR ஜெயலலிதா கால கட்சி அல்ல என்பதை அறிந்து விட்டு கொடுத்து போனால் நல்லது. அந்த தலைவர்களை போல வசீகரம் இவர்களுக்கு இல்லை என்பது 100% உண்மை. இன்னும் பலம் பொருந்திய 2-3 கட்சிகள் வெற்றி பெற இவர்களுக்கு தேவை.
எலெக்ஷன் முடியட்டும் அ தி மு க வுக்கு பெரிய ஆப்பு ரெடி யாக இருக்கு
பாவம் திமுக...காங்கிரஸ் ஷோடங்கர் ஓட ஓட விரட்டுறார்
விவேக்...? ஓட ஓட விரட்டலை... இவர்தான் ஓட ஓட விடுகிறார்...? இவர் ஒண்ணும், எடப்பாடி மாதிரி டில்லிக்கு காவடி தூக்கிலை ஓடலையே.... எதுவா இருந்தாலும் அறிவாலயத்துக்கு வா... இல்ல... ஓடு..ன்னுதானே இங்கேயேதான் குத்த வச்சி உட்கார்ந்திருக்கிறார்...? இந்தாளு ஓடவிடுபவர்...?
கனிமொழி ஏன் ராகுலை டெல்லியில் சந்திக்கிறார்?
பிரதமர் முன்பு நேற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என
பேசியதற்கு டில்லியில் பதில்
செல்ல வேண்டும் அதற்கு தான் இந்த பயணம்
பதில்.. ஷாவிடம் சொல்ல வேண்டும் அது தான் உதறல்
- ஓனர் கிட்டே கேட்டுத் தான் சொல்ல முடியும்.
மாப்பிள்ளை யாரு?, சட்டை யாரோடது? எதுவுமே தெரியாது போலமேலும்
-
கூட்டணியில் நீடிக்கும் இழுபறி; முதல்வர் ஸ்டாலினுடன் சிதம்பரம் சந்திப்பு
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
-
துபாயில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பினார் பிவி சிந்து
-
ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்