சாலையோரத்தில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
அரவக்குறிச்சி: புகழூர் வட்டம், தென்னிலை தென்பாகம், செஞ்சேரி வலசு கால-னியில், கடந்த சில நாட்களாக கோழி கழிவுகளை சாலை ஓரங்-களில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதி-காரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உரிய நட-வடிக்கை எடுக்கவில்லை. கோழி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும். தற்போது கொட்டப்பட்டுள்ள கோழி கழிவு-களை, உடனடியாக அகற்றி, கிருமிநாசினி தெளித்து முழுமை-யான சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாது-காப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்-வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
-
அமெரிக்க தேர்தலை பார்த்து உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழக மாணவி பலி
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி
-
13 பேருக்கு செயற்கை கால்கள்
-
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு