வெளிநாட்டு மணலுக்கு இறக்குமதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மனு
கரூர்: உள்நாட்டு மணல் கொள்ளையை தடுக்க, வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாது-காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட பலர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:காவிரி மணல் கொள்ளை தடுக்க போராட்டம் நடத்திய, இ.கம்யூ., முன்னாள் தலைவர் நல்லகண்ணுவுக்கு மணிமண்-டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும். காவிரி, அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை தடுக்க, பல்வேறு போராட்டம் நடத்-தப்பட்டு வருகிறது. இதனால், மணலுக்கு மாற்றாக மலை-களை அழித்து எம்.சாண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தென்கிழக்காசிய நாடுகளில் மணல் எளிதில் கிடைக்கி-றது. மாதந்தோறும், 15 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
மேலும், 2017ல், மாதம், 5 லட்சம் டன் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய, தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின், மணல் இறக்குமதி செய்-யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். உள்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்றால், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.