சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த கோரி மக்கள் மனு

கரூர்: சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என, கே.புதுப்பட்டி காலனி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.


அதில், கூறியிருப்பதாவது: கிருஷ்ணராயபுரம் அருகே, கே.புதுப்-பட்டி காலனியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து பள்ளி, கல்லுாரிக்கு மாணவ, மாண-வியர் சென்று வருவதுடன், பலர் வேலைக்கு சென்று வருகின்-றனர். இப்பகுதியில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்-பட்டு வருகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரு-கிறது. மது அருந்துபவர்களால் தொல்லைகள் ஏற்படு வருகிறது. சாலையில் பெண்கள் நடமாட தயங்குகின்றனர், எனவே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement