'காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது'
சென்னை: ''காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது,'' என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் விமர்சித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க.,வில் அடிப்படை மரியாதையை தான், காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஒப்பந்தமோ, கமிஷனோ கேட்கவில்லை.
கூட்டணி பிரச்னைக்கு தி.மு.க., தான் காரணம். காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. காங்., உடன் கூட்டணி பேச்சு குறித்து, விஜய் அறிவிப்பார்.
தி.மு.க., மீது எல்லா தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். 5,000 ரூபாய் கொடுத்தபோதும், முதல்வருக்கு பயம் போகவில்லை. த.வெ.க., மீதான பயத்தால், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.,வையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் தி.மு.க., சேர்க்கிறது.
தி.மு.க.,வை தவிர எல்லாரும், எங்களுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகின்றனர். தற்போது, எந்த கூட்டணியும் உறுதியாக இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுகூட, கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
25 என்று அவர் சொன்னது 39க்கு. தவறுதலாக 234க்கு என்று நினைத்து விடாதீர்கள்.
இதில் இருந்து தெரிவது, த.வே.கவுக்கு, இந்தியாவில் எதனை தொகுதி இருக்கு என்று, தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு என்று த.வே.க தாlaivaruku தெரியுமா? இதே கேள்வி ஒருமுறை 1980 களில் நம்ம T. ராஜேந்திரர் ஒரு தலைவரைப்பார்த்து கேட்டது.
த.வே.க ஒரு 110 வருமா?
funny to look at these comments congress TVK will never join as it is just B team of DMK. TVK made to only dismantle AIADMK
நீதான் தைரியமான ஆளாச்சே தனியா தான் நில்லேன் நின்னுதான் பாரேன்
ஓஹோ அப்படியா? தமிழ்நாட்டில் உங்கள் கட்சி இருக்கா?
திமுகவை விட்டு நீங்கள் வெளியே வந்தால், உங்களின் நிலைதான் மிக மோசம் ஏன்னெனில் கொஞ்சம் வடக்கே நிமிர்ந்து பாருங்கள் உங்களின் பலம் என்னவென்று புரியும்.
யார் நீ இப்போது தான் பார்க்கிறேன்
கோபுரத்தை பொம்மை தாங்குகிறது என்று இந்த அறிவாளி சொல்கிறாரா?மேலும்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
-
யூடியூப் சேனல்களில் உலக தலைவர்கள்; 3 கோடி பின்தொடர்வோருடன் மோடி முதலிடம்