கிடப்பில் சாலை பணி; கிராம மக்கள் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆனந்துார் பஞ்., ஆனந்துாரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள போஸ்ட் ஆபீஸ் தெரு, மயானத்திற்கு செல்லும் சாலை, வினாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆங்காங்கே குழிகள் தோண்டியும், ஜல்லி கற்கள் கொட்டியும், சாலை பணியை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள், முதியோர், பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கிராம மக்கள் இது
குறித்து மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மத்துார் பி.டி.ஓ., உமாவிடம் கேட்டபோது, ''கான்டிராக்டரிடம் பேசி உடனடியாக சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement