ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

9

நமது நிருபர்



இஸ்ரேல், சவுதி, கத்தார், அமீரகம், எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.


@1brஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.


பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால் இஸ்ரேல், சவுதி உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கீழ்க்கண்ட நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
1.பஹ்ரைன்,

2.எகிப்து,

3.ஈரான்

4. ஈராக்

5. இஸ்ரேல்

6. ஜோர்டான்

7.குவைத்

8. லெபனான்

9. ஓமன்

10.கத்தார்

11. சவுதி அரேபியா

12. சிரியா

13. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)

14. ஏமன்

ஆகிய நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள் +1-202-501-4444, +1-888-407-4747 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை



ஈரானுக்கு எதிரான தனது ராணுவ தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் அதிகரிக்கும். அடுத்த கட்டமாக ஈரானுக்கு தற்போதை விட அதிக தண்டனைகள் கொடுக்கப்படும். நாங்கள் ஒரு புதிய ஆட்சியை காண விரும்புகிறோம் என்றாலும் முக்கிய விஷயம் என்னவென்றால் ஒரு வருடம் கழித்து அந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும், அவர்களிடம் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்காது. மேலும் எங்களை அச்சுறுத்த இந்த ட்ரோன்களும் இருக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.


@block_P@

தொடரும்

ஈரானின் ஏவுகணை திறன்கள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் வரை ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தொடரும் என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.block_P

Advertisement