மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: ஊதிய உயர்வு கேட்டு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மூன்றாம் நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழக தலைவர் சபாநாயகம் தலைமை வகித்தார்.


இதில், முதல் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிற்சங்க தலைவர்களுடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் என்று சொல்லி பாரபட்சம் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க, கரூர் மண்டல செயலாளர் ஆனந்தபாபு உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement