ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத்தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பதிலுக்கு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது காணப்படும் சூழலை கவனத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். உரிய எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், துபாயில் உள்ள துணை தூதரகம் இரண்டும் வழக்கம் போல் செயல்பாட்டில் உள்ளன. தேவை ஏற்படும் பட்சத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
அவசர தகவல்ளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் 800-46342 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் +971543090571 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களை கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
03 மார்,2026 - 19:30 Report Abuse
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க இவர்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை விட்டபோதே வந்திருக்கலாமே. இப்போ குய்யோ முய்யோன்னு கதறுனா என்ன செய்ய முடியும்.. உங்களின் நன்மைக்குத்தானே திரும்ப வரச்சொன்னார்கள் . ஏன் கேட்கவே மாட்டீங்கறீங்க. நமது இந்தியர்கள் மீது இப்போதுள்ள மத்திய அரசைப்போல உலகத்தில் எந்த நாடும் அவரவர் குடிமக்கள் மீது அக்கறை காட்டுவதில்லை. இருந்தாலும் அரசு சொல்வதை நாம் கேட்டுத்தான் ஆகணும். ஒரு அரசுக்கு உரிய மாறியதயை கொடுக்க பழகுங்கள் இனியாவது. கவலை வேண்டாம் மோடிஜி இருக்கும் வரை உங்களது பாதுகாப்புக்கு உத்திரவாதம் நிச்சயம் உண்டு. கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து அங்கிருந்து இங்கே கொண்டுவர ஏற்ப்ப்பாடு செய்வது மத்திய அரசாங்கம். இங்கே வந்ததும் மாநில அரசுக்கு நன்றி என்று சொல்ல சொல்வார்கள். நீங்களும் அந்த சன் டிவி காரன் சொல்வதை கிளிப்பிள்ளை மாதிரி இனியேனும் சொல்லாதீங்க. வாழ்த்துக்கள் உங்கள் அனைவர்க்கும் 0
0
Reply
மேலும்
-
கூட்டணியை தொடரும் எண்ணத்தில் காங்., தி.மு.க., உள்ளன: கார்த்தி கருத்து
-
பேச்சு நடத்த ஈரான் விரும்பியது; ஆனால் காலம் கடந்துவிட்டது: டிரம்ப்
-
இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்; சொல்கிறார் ராமதாஸ்
-
ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சரையும் கொன்றது இஸ்ரேல்
-
பெட்ரோல், டீசல் விலை உயராது!
-
கமேனி இருக்குமிடம் சிஐஏ கண்டறிந்தது எப்படி?
Advertisement
Advertisement