யூடியூப் சேனல்களில் உலக தலைவர்கள்; 3 கோடி பின்தொடர்வோருடன் மோடி முதலிடம்
நமது நிருபர்
யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளம் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். பயணங்கள், உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு விழாக்கள், வாழ்த்துகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பகிர, சமூக பிரதமர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின்தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிலான சேனல், 3 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சேனலை, 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
* பிரேசில் அதிபர் லூலா டா சில்வா (3வது இடம்)- 15 லட்சம் பேர்
* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (4வது இடம்)- 14 லட்சம் பேர்
* சால்வடோர் அரசியல்வாதி நயிப் புகேலே (5வது இடம்)- 579k
* பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (6வது இடம்)- 391k
* இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி (7வது இடம்) - 158k
இன்ஸ்டாவிலும் ஆதிக்கம்
ஏற்கனவே 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை, பிரதமர் மோடி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 10 கோடியை கடந்துள்ளது.
இரண்டாமிடம் பிடித்துள்ள டிரம்பை, 4.30 கோடி பேர் பின்தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பை பின்தொடர்வோரின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (9)
ramu - ,
03 மார்,2026 - 20:02 Report Abuse
இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடி.... புரிந்தவர்கள் பிஸ்தா 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
03 மார்,2026 - 20:58Report Abuse
இது எங்கே புரியப்போகிறது?? 0
0
vivek - ,
03 மார்,2026 - 21:18Report Abuse
சரிங்க மந்திரி..... 0
0
vivek - ,
03 மார்,2026 - 23:19Report Abuse
சின்னப்பன் பெரிய முந்திரி பிஸ்தாவம்..போவியா 0
0
Reply
EagleEye - ,இந்தியா
03 மார்,2026 - 18:16 Report Abuse
Where is RG and DMK head? 0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
03 மார்,2026 - 18:58Report Abuse
Honest people normally dont follow corrupted and anti-Indian minded stupid fellows. 0
0
Reply
கண்ணன்,மேலூர் - ,
03 மார்,2026 - 15:43 Report Abuse
பிரதமர் மோடி வெறும் தலைவர் மட்டுமல்ல, பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பின் தொடர்பவர்களைக் கொண்ட சமூக ஊடக அதிகார மையமாகவும் இருக்கிறார்! 0
0
Reply
SUBBU,MADURAI - ,
03 மார்,2026 - 14:11 Report Abuse
PM Modis social media presence: YouTube: 30 million. Instagram: 100 million. X: 106 million. Facebook: 54 million. LinkedIn: 5 million. If we talk about just social media influence,
he is the biggest influencer on it as well. 100% his social media presence as a leader is top notch. He never abuses or rage baits.
Im proud of him! 0
0
Reply
thiru - ,
03 மார்,2026 - 14:03 Report Abuse
மோடி என்றுமே powerful 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement