பிரதமர் மோடி 11ம் தேதி திருச்சி வருகிறார்
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 11ம் தேதி, திருச்சிக்கு வருகிறார் என்பதை, தமிழக பா.ஜ., உறுதி செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், வரும் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அறிக்கை வாயிலாக, உறுதி செய்துள்ளார்.
பிரதமர் மோடி, இம்மாதம் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்ததுடன், பிரசார பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். முன்னதாக, கடந்த மாதம் 23ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்றார்.
புரிந்துணர்வு கூட்டணிக் கட்சியான திமுக வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவா பாஸ்?
Trichy & Thanjavur welcomes our Honble PM Modiji.மேலும்
-
கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்... முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்
-
தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
-
749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்
-
மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை
-
கடவூரில் மாசிமக பெருவிழா தேரோட்டம் வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
-
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் காஞ்சிபுரம் அதிகாரிகளுக்கு தலைவலி