இந்தியா-இங்கிலாந்து ரகசியம்... * சாம் கர்ரான் சூசகம்
மும்பை: ''இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே ரகசியம் எதுவும் இல்லை. பிரிமியர் தொடரில் இணைந்து விளையாடியுள்ளோம்,''என சாம் கர்ரான் தெரிவித்தார்.
மும்பை, வான்கடே மைதானத்தில் நாளை நடக்கும் 'டி-20' உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. 2022ல் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தியது. பின் சாம்பியன் பட்டம் வென்றது. 2024ல் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சாய்த்தது. இறுதியில் இந்தியா கோப்பை வென்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. கடந்த பிப்ரவரியில் இதே மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த 'டி-20' போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. அப்போது அபிஷேக் சர்மா 54 பந்தில் 135 ரன் (7x4, 13x6) விளாசினார். இவர் மீண்டும் அசத்த வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹாரி புரூக் கைகொடுக்கலாம்.
இது பற்றி இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' சாம் கர்ரான் கூறியது:
இந்தியா தரம் வாய்ந்த அணி. பிரிமியர் தொடரில் இணைந்து விளையாடியுள்ளோம். அனைத்து வீரர்களை பற்றி தெரியும். இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே மறைத்து வைக்கும் அளவுக்கு ரகசியம் ஒன்றும் இல்லை. பிரிமியர் தொடர் காரணமாக இந்திய ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம். மும்பை, வான்கடே மைதானத்தில் பல முறை விளையாடி இருக்கிறோம். இங்கு உலக கோப்பை அரையிறுதியில் பங்கேற்பது ஒவ்வொரு இளம் வீரரின் கனவாக இருக்கும். சிறந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால், ரன் மழையை எதிர்பார்க்கலாம். இரு நாள் பயிற்சிக்கு அவகாசம் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ரசிகர்களை அமைதியாக இருக்க செய்வோம். எங்களுக்கு எதிராக அபிஷேக் மீண்டும் விளாசக்கூடாது என நினைக்கிறேன். இவரை கட்டுப்படுத்த சிறப்பு திட்டங்கள் வகுத்துள்ளோம்.
இவ்வாறு சாம் கர்ரான் கூறினார்.
பும்ராவுக்கு இரு ஓவர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''பும்ராவுக்கு 'பவர் பிளே'யில் இரு ஓவர் பந்துவீச வாய்ப்பு அளிக்க வேண்டும். 5வது ஓவரை வீசுவது சரியல்ல. ஏற்கனவே வீசப்பட்ட நான்கு ஓவரில் 24 பந்துகளை சந்தித்து எதிரணியின் பேட்டர்கள் 'செட்டில்' ஆகி விடுவர். இதற்கு இடம் அளிக்க கூடாது. பும்ரா துவக்கத்தில் பந்துவீசி பட்லர், சால்ட், ஹாரி புரூக் விக்கெட்டுகளை வீழ்த்தினால், இங்கிலாந்தின் 'பேட்டிங் முதுகெலும்பை' தகர்த்து விடலாம். பட்லர் 'பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். இவரை குறைத்து மதிப்பிட கூடாது. ஆபத்தான பேட்டரான இவரை விரைவில் அவுட்டாக்க வேண்டும்.
இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. பிரிமியர் தொடரில் விளையாடிய அனுபவம் இங்கிலாந்து வீரர்களுக்கு கைகொடுக்கும். இந்திய அணியின் பேட்டர்கள் எந்த இடத்திலும் விளையாடுவது பலம். திலக் வர்மா 3, 5, 6வது இடத்தில் களமிறங்கி அசத்துகிறார்,'' என்றார்.
மேலும்
-
கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்... முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்
-
தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
-
749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்
-
மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை
-
கடவூரில் மாசிமக பெருவிழா தேரோட்டம் வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
-
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் காஞ்சிபுரம் அதிகாரிகளுக்கு தலைவலி