ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு செலவு ஏற்பட்டுள்ளதாக, ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படையினர் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு, அமெரிக்க ராணுவத்துக்கு செலவாகிறது.
* அமெரிக்காவின் பிரவுன் பல்கலை, கடந்தாண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023 அக்டோபர் முதல், 2025 வரை, இஸ்ரேலுக்கு 21.7 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளது. (ஒரு பில்லியன் டாலர் என்பது, 9100 கோடி ரூபாய்)
* அது மட்டுமின்றி, ஏமன், ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு ஆதரவான ராணுவ செயல்பாடுகளுக்கு அமெரிக்க பட்ஜெட்டில் இருந்து 9.65 பில்லியன் டாலர் முதல் 12 பில்லியன் டாலர் வரை உதவி வழங்கப்பட்டுள்ளது.
* அதாவது, 2 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உதவி மட்டும், 31 பில்லியன் முதல் 33 பில்லியன் டாலர் வரை என தெரியவந்துள்ளது.
* ஈரான் மீதான போர் தொடங்கிய முதல் நாள் மட்டும், அதாவது குறிப்பிட்ட 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு ஆன செலவு, 779 மில்லியன் டாலர்கள். அதாவது, 7,088 கோடி ரூபாய்.
* போருக்கான முந்தைய ஏற்பாடுகள் என்ற வகையில் 630 மில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் 5733 கோடி ரூபாய்.போர்க்கப்பல்களை கொண்டு வருதல், விமானங்களை வெவ்வேறு நாட்டு தளங்களில் தயார் நிலையில் வைத்திருத்தல், வீரர்களை கொண்டு வந்து நிலை நிறுத்துதல் என்ற வகையில் ஆன செலவு இது.
* அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஜெரால்டு போர்டு. இந்த கப்பல், போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 4600 படை வீரர்களை கொண்ட இந்த கப்பலுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு மட்டும் 6.5 மில்லியன் டாலர்.
* ஈரான் மீதான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு குறைந்தபட்சம் 40 பில்லியன் டாலர் (3 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்) முதல் அதிகபட்சம் 115 பில்லியன் டாலர் (10 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகும் என்று போர் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். இது, இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதற்கு மேலும் போர் முடியாமல் தொடர்ந்து இழுத்துக் கொண்டே சென்றால், 210 பில்லியன் டாலர் (19 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்) வரை செலவாகவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்காவின் 2025ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் 850 பில்லியன் டாலர். அதாவது, 78 லட்சம் கோடி ரூபாய்கள். (அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ராணுவ பட்ஜெட் பத்தில் ஒரு பகுதி மட்டுமே. 2025 - 26ல் இந்திய ராணுவ பட்ஜெட் 81 பில்லியன் டாலர்)
தன் நாட்டை பற்றியும் தன் மக்களை பற்றியும் சிறிதும் கவலையில்லாதனவன் இந்த முல்லா கமெனி. தன் நாட்டு மக்களையே கொன்று குவித்தவன். அமெரிக்கா சிறிது தாமதித்திருந்தாலும் அணு குண்டு வீசி மத்திய கிழக்கு பிராந்தியத்தையே நாசம் செய்திருப்பான்.
A 4.3 magnitude earthquake STRUCK the Gerash region in southern Iran today. Natural or something else. From Reliable sources, it has been confirmed that earthquake isnt natural.
ஏண்டா காசை கறியாகிரிய்ங்க.
no money spent by us on operation Sindhoor ? !
இது என்ன பிரமாதம்... ட்ரம்ப்பர் எல்லா நாடுகளுக்கும் நாலு Tax போட்டாங்கன்னா போச்சு.மேலும்
-
மாணவர்கள் லேப்டாப் கேட்டு ஆர்ப்பாட்டம்
-
பி.ஜி.பி., கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
-
தேசிய தாய் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
-
குடிநீர் வழங்காததால் காத்திருப்பு போராட்டம்
-
தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
'மீண்டும் மஞ்சப்பை' வெண்டிங் மெஷின்கள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுமா