பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் பீஹாரில் இருந்து பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின் போட்டியிடுகிறார்.
பீஹாரில் இருந்து எம்எல்ஏ ஆன நிதின் நபின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜவின் தேசியத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நாடு முழுவதும் காலியாகும் 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் மார்ச் 16 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜ அறிவித்துள்ளது.
அதில் பாஜவின் தேசியத் தலைவராக உள்ள நிதின் நபின்,பீஹார் மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார்.
பாஜ வெளியிட்ட 9 பேர் கொண்ட பட்டியலிலில் இடம்பெற்றுள்ளவர்கள்:
நிதின் நபின்( பீஹார்)
சிவேஷ் குமார்( பீஹார்)
தரேஷ் கோவாலா, ஜோகென் மோகன்( அசாம்)
லட்சுமி வர்மா ( சத்தீஸ்கர்)
சஞ்சய் பாட்டியா( ஹரியானா)
மன்மோகன் சமல், சுஜித் குமார்( ஒடிஷா)
ராகுல் சின்ஹா( மேற்கு வங்கம்) ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
கொல்லப்பக்கம் தான் நேர் வழி. எம்.பி ஆனாத்தானே சலுகை , சம்பளம் எல்லாம் கிடைக்கும்.
அப்பாவி..நீயும் இப்படி ரெண்டு மொக்கை கருத்து போட்டதானே நூறு இருநூறு கிடைக்கும்...உன் குடும்பமும் பிழைக்கும்
என்ன இவர் தமிழ்நாடு பக்கமே காணும் ?