குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதால், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


@1brஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஈரானும், அமெரிக்கா, இஸ்ரேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களில் இருந்து அதிகாரிகளை வெளியேற்ற அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் டிரோன் தாக்குதல்களுக்கு ஆளானது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது.


ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதேபோல், லெபனானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 154 பேர் காயம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஈரான் தாக்குதல்களால் கத்தாரில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தூதரக அதிகாரிகள் ஈரானிடமிருந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement