இன்னும் 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்; சொல்கிறார் ராமதாஸ்
சென்னை: ''இன்னும் மூன்று நாட்களில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், நிருபர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி: பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை தேர்தல் பணி செய்ய உற்சாகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கட்சியின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. முக்கியமான காலகட்டத்தில், பா.ம.க., இருக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை.
அதனால், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். அரசியலில் மாற்றங்கள் வருவது இயற்கைதான். ஒரு முடிவு எடுத்து விட்டால், அதில் உறுதியாக இருப்போம். அடுத்து வரும் மூன்று நாட்கள், தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பை, அனைத்து ஊடகங்களும் நிச்சயமாக பறைசாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன சார் அவசரம். சின்னம்மாவுடன் கலந்து பேச அவகாசம் வேண்டும்.
அன்புமணிக்கு தான் செல்வாக்கு ...சொந்த மகனுக்கு சுனியம் வைக்கிற அப்பா இந்த உலகத்துல இவரு ஒருவர் மட்டுமே
என்னாப்பா அது.
ஒரு வேலை சின்னம்மாவுடன் தேர்தல் கூட்டணியாக இருக்குமோ, என்னவோ?
ஒவ்வொரு வினாடியும் யுகமாய் தெரிகிறதே. நான் என்ன செய்வேன்?
Now Ramadass ji is a political orphan , no one wants to look at his face . Time is ripe for retirement
இவர் கான் கிராசோடு சேர்ந்து tvk கூட கூட்டணி வைக்கபோகிறார் அது அகில உலக அளவில் ஒரு பெரிய கூட்டணி தானே பரபரப்பு அதிகமான அளவில் இருக்கும்.
ஒருவேலை ஓபிஎஸ் ஈனமாணம் இல்லாமல் திமுகவிடம் சேந்தது போல திரு. ராமதாஸ் அவர்கள் திருமாவளவனின் விசிக வில் சேந்து விடுவாரோ.
அரசியலுக்கு முழுக்கு ????
அரசியல் அலுத்து விட்டது. எனவே ஜோசியர் ஆக முடிவு எடுத்து விட்டார். அதிலும் அவர் ஜொலிக்க முடியாது. கட்டங்கள் சரியில்லை. அஷ்டமச்சனி மகன் உருவில் போட்டுத் தாக்குகிறது! விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்! நாத்திக கட்சி கூட்டணி உதவாது!
இவரும் அறிவாலயத்தை நோக்கி நடைப்பயணம் கிளம்பிவிட்டார். அறிவாலயத்தை எட்ட மூன்று நாட்கள் ஆகும்.மேலும்
-
மாணவர்கள் லேப்டாப் கேட்டு ஆர்ப்பாட்டம்
-
பி.ஜி.பி., கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
-
தேசிய தாய் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
-
குடிநீர் வழங்காததால் காத்திருப்பு போராட்டம்
-
தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
-
'மீண்டும் மஞ்சப்பை' வெண்டிங் மெஷின்கள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுமா