வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவிப்பு

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்று கடைசி நாளில் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. மறுபக்கம் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது ஜிம்பாப்வே. இந்த இரு அணிகளும் துபாய் வழியாக நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் திடீரென ஏற்பட்ட போர் காரணமாக, உலகின் மிகவும் 'பிஸியான' துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் நாடு திரும்ப முடியாமல் இரு அணி வீரர்களும் தவிக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்ட செய்தியில்,' பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விமான பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்புவது தாமதம் ஆகிறது,' என தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே தரப்பில் வெளியான செய்தியில்,' எங்கள் அணியினர் பாதுகாப்பாக நாடு திரும்பும் வகையில், ஐ.சி.சி.,யுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement