போதை மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம்: எராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, கஞ்சா, கோகைன், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள், இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சுங்கத்துறை, கியூ பிரிவு போலீசார் கூட்டு நடவடிக்கையாக, மண்டபம் அருகே தென்னந்தோப்பு ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள், இரண்டு படகு இன்ஜின்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல்காரர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

கியூ பிரிவு போலீசார் கூறுகையில், 'போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில், செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அப்பகுதி முழுதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement