மாணவியரிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'போக்சோ'

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காந்தி நகரை சேர்ந்தவர் பாபு, 53; அருகாமையில் உள்ள கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். இவர், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடு வதாக புகார் எழுந்தது.

மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் தாமரைமணாளன் மற்றும் அலுவலர்கள், பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அதில், பாபு மீதான புகார் உறுதியானது. மேலும், தலைமை ஆசிரியர் அறையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, மாணவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.

தாமரைமணாளன் புகாரில், வரஞ்சரம் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பாபுவை தேடுகின்றனர். பாபுவை, 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

Advertisement