ரொனால்டோவுக்கு காயம்
ரியாத்: போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. கிளப் அரங்கில் சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். சவுதி புரோ லீக் தொடரில், கடைசியாக அல் பாஹியா அணிக்கு எதிராக விளையாடினார். திடீரென ஏற்பட்ட போர் காரணமாக, மார்ச் 8ல் துவங்க இருந்த காலிறுதி ஒத்திவைக்கப்பட்டன.
ரொனால்டோ குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி, ஸ்பெயினின் மாட்ரிட் சென்று விட்டார் என செய்தி வெளியாகின. இதனிடையே தொடை பின்பகுதி காயத்தால் அவதிப்படும் ரொனால்டோ, சவுதி அரேபியாவில் சிகிச்சையில் உள்ளார். அடுத்து அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் (ஜூன் 11-ஜூலை 19) நடக்க உள்ள 'பிபா' உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணி அதிர்ச்சி
பார்சிலோனா: ஸ்பெயினில் நடக்கும் 'கோபா டெல்
ரே' கால்பந்து தொடருக்கான அரையிறுதியில் அத்லெடிகோ மாட்ரிட், பார்சிலோனா
அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் நடந்த முதல் போட்டியில் பார்சிலோனா அணி 0-4
என தோல்வியடைந்தது. பார்சிலோனாவில் நடந்த 2வது போட்டியில் எழுச்சி கண்ட
பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளின்
முடிவில் பார்சிலோனா அணி 3-4 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து
வெளியேறியது. அத்லெடிகோ மாட்ரிட் அணி பைனலுக்கு முன்னேறியது.
எக்ஸ்டிராஸ்
* கோல்கட்டாவில் இன்று நடக்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகள் மோதுகின்றன. கோவா அணி, இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என, 7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
* கர்நாடகாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 6-1, 6-3 என சகவீராங்கனை சோனல் பாட்டீலை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜீல் தேசாய் 6-2, 6-1 என, சகநாட்டை சேர்ந்த ஜெனிபர் லுய்காமை வென்றார்.
* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 2-3 என (12-14, 12-14, 11-8, 11-9, 2-11) என உலகின் 'நம்பர்-6' வீரர், வேல்சின் ஜோயல் மேகினிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது: அமெரிக்க கடற்படை 87 பேர் பலி; 61 பேர் மாயம்
-
அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்
-
பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
-
மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
-
சுட்ட மண் நகைகள்!
-
தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!