பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
விழுப்புரம்: பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று துவங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் வரும் ஜூலை மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (5ம் தேதி) பட்டதாரி ஆசிரியர் - உதவியாளர் (இயற்பியல்) பாடத்திற்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்பு தொடர்பான விபரங்களை மொபைல் 9499055906 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பிற்கு https://forms.gle/JPhrjQ6cnhWoTDKy7 என்ற இணையதள லிங்கில் தங்கள் பெயரை பதியலாம்.
மேலும், இது ஆன்லைன் பயிற்சி வகுப்பாக இருப்பதால் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் இந்த பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்