மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
செஞ்சி: தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மாற்றுத்திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனந்தபுரம் அடுத்த பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 35; இவரது மனைவி ஜெயா 30. ஜெயா பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்.இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயா வீட்டு மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement