குகேஷை வென்றார் அரவிந்த்
பிராகு: பிராகு செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் குகேஷ், சக வீரர் அரவிந்த் சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார்.
செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், 'நடப்பு சாம்பியன்' இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
ஆறாவது சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் மோதினர். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 39 நகர்த்தல் வரை இருவரும் சமபலத்தில் இருந்தனர். 40வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, அரவிந்த் ஆதிக்கம் துவங்கியது.
இதில் இருந்து மீள முடியாத குகேஷ், 48 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஆறு சுற்று முடிவில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடியரசின் டேவிட் நவரா, அடுத்த இரு இடங்களில் (தலா 4.0 புள்ளி) உள்ளனர். அரவிந்த் 7 (2.5), குகேஷ் (1.5) கடைசி இடத்தில் உள்ளனர்.
'நம்பர்-20'
பிராகு தொடரில் 6 சுற்றில் ஒன்றில் கூட வெற்றி பெறாத (3 'டிரா', 3 தோல்வி) குகேஷ், சர்வதேச தரவரிசை பட்டியலில் 19 புள்ளிகளை இழந்தார். இவர், 20 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மேலும்
-
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது: அமெரிக்க கடற்படை 87 பேர் பலி; 61 பேர் மாயம்
-
அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்
-
பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
-
மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
-
சுட்ட மண் நகைகள்!
-
தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!