சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி: ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஜிங், ஆரோன் டாய் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-23 என போராடி இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டது.
மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-23, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, 12-21, 18-21 என தாய்லாந்தின் பார்ன்பாவேயிடம் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது: அமெரிக்க கடற்படை 87 பேர் பலி; 61 பேர் மாயம்
-
அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்
-
பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
-
மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
-
சுட்ட மண் நகைகள்!
-
தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!
Advertisement
Advertisement