மாவட்ட செஸ் போட்டி நாளை மறுநாள் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர், பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி, காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் துவங்குகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில், மாவட்ட அளவில், பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், பொது பிரிவு, பெண்கள் தனி பிரிவு, 50 -- 65 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் என, தனித்தனி பிரிவுகளாக செஸ் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ - மாணவியருக்கு கோப்பையும், பங்கேற்பவர்களுக்கு சான்றிழும் வழங்கப்படும்.
அனைத்து பிரிவுகளில் சிறப்பிடம் பெறும் இரண்டு வீரர் - வீராங்கனையர், மே 6 - 10ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
மேலும், மூத்த குடிமக்களுக்கும், பொது பிரிவினர், மற்றும் பெண்கள் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 99942 93081 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலர் வி.ஜோதிபிரகாசம் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
-
திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
வீடின்றி தவிக்கிறேன்; விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் புதிய மனு
-
ஆல் தி பெஸ்ட் இந்தியா
-
ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321
-
ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்