ஈரானில் 3 ஆயிரம் இலக்குகளில் துல்லிய தாக்குதல்; அமெரிக்க படை தகவல்
நமது நிருபர்
ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி உள்ளோம் என அமெரிக்க படை மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நீடிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் தனது ராணுவம், கடற்படை மற்றும் முக்கிய தலைவர்களை இழந்து விட்டது. நிபந்தனையற்ற சரண் அடைவதை தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஈரானில் இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை பகிர்ந்து, அமெரிக்க படை மத்திய தலைமையகம் கூறியிருப்பதாவது:
ஈரானில் அமெரிக்கப் படைகள் கடந்த ஒரு வாரமாக நடத்தி வந்த தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குள் குறிவைக்கப்பட்டு துல்லியமாக அழிக்கப்பட்டன.
எங்கள் படைகள் தாக்குதல் நடத்தும் வேகத்தை குறைக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கின்றன'' என தெரிவித்துள்ளது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஈராக் ஈரான் சிரியா துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள குர்திஷ் இன பகுதிகளை இண்டைது ஒரு புதிய நாட்டை உருவாக்குவதன் மூலம் அமெரிக்கா அந்த பகுதியில் ஒரு ஆதரவு நாட்டை உருவாக்கமுடியும் அமைதியும் ஏற்படும் குர்திஷ் மக்கள் நீண்ட நாட்களாக சுதந்திரத்திர்ற்கு போராடி வருகிறார்கள் தவிர அடிப்படைவாத தீவிரவாதிகளும் இல்லை
A Tehran Basij Police Station burns after a U.S. strike. And Iranians gather around it to sing, dance and celebrate.
ஈரான் படை சரணடைந்து அங்குள்ள தீவிரவாத ஆட்சி அகற்றப்படும் வரை தாக்குதல் தொடரனும். ஆப்கன் போர் முடிந்தும் அங்குள்ள பெண்களுக்கு விடுதலை கிடைக்காமல் அடிப்படைவாத தாலிபான்களிடமே ஆட்சியை கொடுத்தது புல ஆகாமல், ஈரானிய பெண்களுக்கு சுதந்திரமாக வாழ வழி கிடைக்கனும்.
4.2 magnitude earthquake recorded, Iran. Frequently earthquake in Iran is raising concern.மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி